தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் ஜெயபிரகாஷ் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவரை காதல் வலையில் வீழ்த்தியதோடு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் மாணவி கர்ப்பமான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயபிரகாஷிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால் நடந்த சம்பவங்கள் குறித்து தன் பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆண்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.