
உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மேடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்ததால் திருமணம் நின்றது
உத்திரபிரதேசம் மாநிலம் பட்டுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவருக்கும் ஜெயராபூரை சேர்ந்த கௌதம் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் ஊர்வலத்தின் போது கௌதம் குடிபோதையில் இருந்ததாகவும், மணமடைக்கு பின்னால் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். மேலும் கௌதமின் பெற்றோரிடம் திருமணத்திற்கு செலவழித்த 8 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.