
தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி அழுது கொண்டே குழந்தை இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக கூறினார். அதன்படி சர்க்கரையின் அளவு 400-க்கும் அதிகமாக இருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜதானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சர்க்கரை நோயினால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.