
குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்த நிலையில் தற்போது NBTC நிறுவனம் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் அந்த கட்டிடத்தில் தங்களுடைய ஊழியர்களை குடியமர்த்திய நிலையில் அவர்களின் இறப்புக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதோடு அவர்களின் குடும்பத்தினர்களில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இதில் இந்தியர்களுக்கான நஷ்ட ஈடு இந்திய தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட அந்நிறுவனத்தின் நிறுவனர் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதோடு அதை நினைத்து கதறி அழுததாகவும் கூறியுள்ளார்.