வெறும் 600ரூபாய்க்காக மகளை, தந்தை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பூர்தி குப்தா என்ற 24 வயது இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டதில், பூர்தி குப்தாவை அவரது தந்தை சஞ்சய் குப்தா கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக சஞ்சய் பூர்திக்கு 600 ரூபாய் கொடுத்துள்ளார். அதை திருப்பி தருமாறு  கேட்டுள்ளார். அதற்கு பூர்தி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சஞ்சய், இரவில் பூர்தி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, சஞ்சய் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.