
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ், சீமான் மற்றும் சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.