சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.