
கோவாவில் “ஜம்பிங் சிக்கன்” என்ற பெயரில் தவளை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பிளேட் 1500 ரூபாய் வரை விற்பனையாகின்ற நிலையில் இந்த கறியை கோவா மக்களும், வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் இருந்து கோவாவுக்கு பேருந்தில் 41 தவளைகள் கடத்தி செல்லப்பட்டது. இந்த நிலையில் அதை மீட்ட வனத்துறை பேருந்து ஓட்டுனரை கைது செய்துள்ளது. இறைச்சி விற்பனைக்காகவே தவளைகள் கடத்தி செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.