கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.

கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கோவிந்தராஜ் என்பவரிடம் சாராயம் வாங்கி குடித்ததாக தெரிகிறது. இதனால் பாதிப்பு ஏற்பட்டு ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் மூன்று பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. ஆனால் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நிகழவில்லை என்று ஆட்சியர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.