
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விதார்த். இவர் தற்போது ஷாஜி சலீம் இயக்கியுள்ள லாந்தர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்வேதா டோரத்தி, விபின் மற்றும் பசுபதி ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் லாந்தர் படத்தின் டிரைலரை நேற்று பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.