கள்ளக்குறிச்சி மாவட்டத்தி கள்ளச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய, கையாலாகாத விடியா திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் வரும் 24-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.