
இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பிறகு நிரந்தர சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கிடையில் பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியானது சபாநாயகர் பதவியை கேட்டு அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சபாநாயகர் பதவி தேவையில்லை என அறிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் நலனே முக்கியம் என்பதால் சபாநாயகர் பதவி தேவையில்லை என்றும் அமித்ஷாவிடம் கூறிவிட்டதாக கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.