
T20 Wc பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம், T20 WCயில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டதைக் கைப்பற்றியுள்ளது. 177 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய தெ.ஆ., அணியை இந்திய அணி பவுலர்கள் 169/8 ரன்னில் கட்டுப்படுத்தினர். ஹர்திக் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
17 வருட நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசையை இந்திய வீரர்கள் நிறைவேற்றியுள்ளார். வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோப்பையை வழங்கினார். கோப்பையை பெற வரும்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றுக்கொண்டார். இந்நிலையில் வெற்றியை கொண்டாடும் விதமாக மைதானத்திலேயே விராட் கோலி, அர்ஷீப்தீப் சிங், ரிங்கு சிங்க் ஆகியோர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Virat Kohli, Arshdeep Singh and Rinku Singh dancing. 😭
India India | GOAT | After 17#T20WorldCup #T20WorldCup2024 #T20WorldCupFinal #ViratKohli #ViratKohli𓃵 #RishabhPant #TeamIndia #indiawins pic.twitter.com/tuVdtpxZ6f
— Mohammed Faizan Shaikh (@king7851007) June 29, 2024