
மேற்கு வங்காளம் மாநிலம் சோப்ரா நகரில் சாலையின் நடுவே மக்கள் பலர் கூடி இருந்த சமயத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண் இருவரையும் நபர் ஒருவர் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். ஆனால் இதனை தடுக்க யாரும் முன் வரவில்லை. அந்த இளம் பெண் வலியால் அலறி துடித்த போதும் பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு சிலர் அந்த நபரின் கையில் இருந்த குச்சிகளை வாங்கி அவரை தடுக்க முயன்ற நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதேசமயம் அந்த இளம் பெண்ணை இரக்கமின்றி அடித்த நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாஜேமுல் என்பவர் ஆவார். அந்த இளம் பெண்ணை தாக்கிய இவர் இது குறித்து கூறுகையில், அந்தப் பெண் செய்தது தவறு, கணவர் மற்றும் பிள்ளைகளை விட்டுச் சென்ற கொடிய விலங்கு. இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது கிராமத்தில் நடக்கும் விவகாரம் என்றும் இதற்கும் எங்களுடைய கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Not even #KangarooCourt ! Summary trial and punishment handed out by d @AITCofficial goon nicknamed JCB.
Literally bulldozer justice at Chopra under @MamataOfficial rule. pic.twitter.com/TwJEThOUhi— Md Salim (@salimdotcomrade) June 30, 2024