
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து பிரியா (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.ஏ, பி.எட் படித்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் எம்.ஏ, பி.எட் படித்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில் வருகின்ற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு திருமண பத்திரிக்கையை இருதரப்பு பெற்றாரும் உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை இந்து பிரியா தோட்டத்துக்கு சென்றுள்ளார். அதன் பின் அங்குள்ளவர்களிடம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் திடீரென தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் மணிமேகன் தன் காதலியை பார்க்க விரைந்து வந்தார். அப்போது தன் காதலி தூக்கில் பிணமாக தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வாழ்வதைவிட சாவதே மேல் என கருதி கிணற்றில் குதித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் உயிருடன் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.