சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனை நடத்தியது. ஆனால் அது புரளி என்று தெரிய வந்ததை தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீப நாட்களாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது