
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மேடைக்கு கையில் குழந்தையோடு வந்த பெற்றோர் ஒருவர் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி விஜய்யிடம் கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் குழந்தைக்கு “தமிழரசி” என பெயர் சூட்டியுள்ளார்.