
உத்திரபிரதேசம் மானியம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அவர் இன்று அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடுவார்”என்று தெரிவித்துள்ளார்.