
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் புதுவிதமான விவாதத்துடன் நடைபெறும் நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
பல வருடங்கள் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருவதால் அவருக்கும் தனி மவுசு உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் குடும்பத்திற்காக தங்களின் விருப்பு வெறுப்புகளை மறைத்து வாழும் பெண் பிள்ளைகளின் ஆதங்கம் கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடந்துள்ளது.
அதில் பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக தனது 15 வயது முதல் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கால் வழியால் துடைக்கும் போது அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அம்மாவும் அழுது புலம்புவார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் சமூகத்தினரால் அவர்கள் பல தடவைகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் பேசிய வீடியோ தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதனைப் போலவே மற்றொரு பெண் ஒருவர் தன்னுடன் பிறந்த சகோதரியையும் சகோதரனையும் திருமணம் செய்து வைத்துவிட்டு அவர்கள் திருமணத்திற்காக வாங்கிய கடன்களை குறித்த பெண் வேலை செய்து கட்டுவதாக உருக்கமாக பேசியுள்ளார். இதற்கு அவருடைய தாயும் ஆதரவாக இருக்கின்றார்.