கேரளாவில் அமீபா தொற்றுக்கு ஆளாகி 3 மாதங்களில் 3 சிறுவர்கள் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மிருதுல் என்ற 14 வயது சிறுவன் அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளார். அசுத்தமான குளம், குட்டையில் குளிக்கும் பொழுது , அந்த நீரில் வாழும் ஒட்டுண்ணியான அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் சென்று, மூளையை தின்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.