விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாதக, பாமக உள்ளிட்ட மூன்று கட்சிகள் போட்டியிடுக்கின்றன. அதன்படி  திமுகவின் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா ஸ்டாலின் என்பவர் வைரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு ஆதரவாக விக்கிரவாண்டி பகுதியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதி மூன்று தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம் போடும் திமுக என்று குறிப்பிட்டுள்ளனர்.