
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக 3-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனக்கு 3 பெண் குழந்தைகள் இருப்பதால் ஒரு குழந்தையை கொன்று விட மாதையன் முடிவு செய்துள்ளார். இது பற்றி அவர் தன் மனைவியிடம் கூறிய நிலையில் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நேற்று முன்தினம் குழந்தையை தூக்கிக்கொண்டு மாதையன் வெளியே ஓடிவிட்டார்.
இதை தடுத்த அவருடைய மனைவியை தள்ளிவிட்டுவிட்டு குழந்தையை தூக்கி சென்று விட்டார். அவருடைய பின்னால் அக்கம் பக்கத்தினருடன் சென்று சின்னம்மா பார்த்தார். இதனால் குழந்தையை போட்டுவிட்டு அவர் ஓடிவிட்டார். அப்போது ஒரு பாறையில் பேச்சு மூச்சின்றி குழந்தை கிடந்தது. அதோடு கன்னத்தில் காயங்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு சின்னம்மா அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக கெலமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் குழந்தையை மாதையன் அடித்து கொன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மாதையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.