
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிறகு தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வைரல் இன்பெக்சன் வந்தால் நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ் செய்யலாம் என்று கூறினார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில் மருத்துவர்கள் உள்ளிட்ட சிலர் நடிகை சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு என்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தான் நான் அந்த கருத்தை தெரிவித்தேன் என்றும் எனக்கு சிகிச்சை வழங்குபவர் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா நடிகை சமந்தாவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சமந்தாவுக்கு ஒரே ஒரு கேள்விதான். ஒருவேளை நீங்கள் பரிந்துரை செய்த மருத்துவம் உதவாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா அல்லது உங்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர் பொறுப்பேற்பாரா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.