
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காற்று மாசு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த காற்று மாசு வால் கடந்த 12 ஆண்டுகளில் 28,674 பேர் உயிரிழந்துள்ளதாக தி லான் செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் டெல்லியில் அதிகபட்சமாக 95719 பேரும், கொல்கத்தாவில் 45 ஆயிரத்து 458 பேரும், மும்பையில் 30 ஆயிரத்து 544 பேரும், அகமதாபாத்தில் 28,650 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக இறப்பு, சுவாசம், இருதய நோய்கள் மற்றும் நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பலவிதமான ஆரோக்கியத்திற்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.