
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் வினோத். முப்பது வயதான இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சராசரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி சென்றது.
இந்த வழக்கில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் நான்கு பேர் 17 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. வினோத் செய்த கொலைக்கு பழிப்பழிக்கு பழியாக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.