
தமிழக அரசு சிறப்பு பொது விநியோகி திட்டத்தின் மூலமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் இலவச அரிசி, தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் & கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும் எனக் கூறிய அவர், சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.