
சேலம் அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கு 17 வயது முதல் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை, நாடகம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம் மற்றும் பறையாட்டம் ஆகிய கலைகள் கற்றுக் கொடுக்கப்படும். இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் உடனே இசை கல்லூரியில் சேரலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய 0427-2906197, 99526 65007 ஆகிய திட்ட அலுவலரின் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.