
சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவில் தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15ம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே.நகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.