
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சற்றுமுன் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தையும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாவது இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் இதில் 10 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். பொறியியல் கலந்தாய்வு 22ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.