
பெங்களூரில் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு விபச்சாரம் நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு போன் கால் வந்தது. அவர் அதை எடுத்து பேசிய போது,எதிரே இருந்தவர் நீங்கள் உல்லாசமாக இருக்க வேண்டுமா ? எங்களிடம் வாலிபர் இருக்கிறார்கள், வேண்டுமென்றால் பதிவு செய்து பயன்பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார். இதைக் கேட்ட அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆனந்த் சர்மா என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணையில் அவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை விபச்சார தொழில் செய்ய அழைப்பதும், கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தைகள் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த செல்போன் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு சோதனைசெய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.