மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் பயிற்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூஜா கேட்கர். இவர் பயிற்சியின் போது நிறைய ஆடம்பர வசதிகள் மற்றும் அதிகமான மரியாதைகளை எதிர்பார்த்து மிகவும் அடாவடியான செயல்களை செய்துள்ளார். இதனால் தற்போது இவரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். அதாவது பூஜா தனக்கு தனி அறை, தனி அலுவலக எண், காருக்கு விஐபி நம்பர், தனியாக உதவியாளர் வேண்டுமென்று கேட்டு அடம் பிடித்துள்ளார்.

இதற்கு உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த போதிலும் அவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அதோடு மாவட்ட ஆட்சியர் வெளியே சென்ற போது அவருடைய அறையில் சீட்டில் சென்று உட்கார்ந்ததோடு அவருடைய பெயர் பலகையை எடுத்துவிட்டு அதில் தன்னுடைய பெயர் பலகையை வைத்துள்ளார். அதோடு ஒப்பந்ததாரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் சைரன் வைத்துக்கொண்டு சுற்றி வந்துள்ளார். மேலும் இவருடைய அடாவடித்தனம் எல்லை  மீறி போகவே தற்போது அவருக்கு வாசிம் மாவட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்யுமாறு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.