
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நித்திஸ்வரன் என்ற சிறுவன் (7) தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் மஞ்சள் காமாலையால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.