மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம் என்று பெற்றோருக்கு மர்ம கும்பல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த கும்பலின் எச்சரிக்கையையும் மீறி சிறுவனின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனால் போலீசில் விடுபட்டு விடுவோம் என்ற பயத்தில் சிறுவனை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பி ஓடி உள்ளது. இதனை தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம கும்ப கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.