தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கு முதலில் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று வலது புறம் மேலே கொடுக்கப்பட்டுள்ள jobs என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

இடது பக்கம் உள்ள ஆப்ஷன்களில் உங்கள் ஊர், படிப்பு மற்றும் தகுதிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பிறகு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் வரிசைப்படுத்தப்பட்டு திரையில் தோன்றும்.

சரியான வேலை வாய்ப்பை கிளிக் செய்து Apply now என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

பிறகு சுய விவரங்கள் மற்றும் பயோடேட்டாவை உள்ளிட்ட விண்ணப்பிக்கவும்.

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த இணையதளம் மூலம் வேலை வாய்ப்பு வழங்குகின்றன.