
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் தினம்தோறும் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இலவசம் கொடுத்ததால்தான் போக்குவரத்து துறை உயிர் பெற்றுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்வதாகவும் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்து கழகத்தை நடத்த வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பேருந்து கட்டண உயர்வு என்பது தற்போது கிடையாது என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.