
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மருத்துவம் -ஹோமியோபதி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் ஐந்து ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புகளுக்கு சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள கல்லூரிகளில் 160 இடங்களும், 17 தனியார் கல்லூரிகளில் 80க்கும் மேற்பட்ட இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.