
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். இந்த நிலையில் தமிழக அரசின் ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என்று மின்வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடு மற்றும் 14 மீட்டர் உயரம் மிகாமல் 30 சதுர மீட்டர் கட்டட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் இனி கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. எனவே மின் இணைப்பை பெற https://www.tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/ என்ற லிங்கில் இன்றே விண்ணப்பிக்கவும்.