சென்னை தாம்பரம் இடையே இன்டர் லாக் சிக்னல் பணிகள் நடைபெறுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கோட்டை, தென்காசி, சேரன்மாதேவி மற்றும் நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் செங்கோட்டை -தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் அதற்கு ஏற்றது போல தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள்.