கணவருடைய மரணத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆர்எம்எஸ்அட் என்று அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர், ரம்யா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களுக்கு பார்கவ் என்ற 13 வயதில் மகனும், ஒரு மகளும்  உள்ளனர்.

இதற்கிடையில் ஸ்ரீதர் மூன்று மாதங்களுக்கு முன்பாக புற்றுநோயால் இறந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரம்யா தன்னுடைய மகனோடு தனியாக வசித்து வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொடுள்ளார். மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.