டெல்லி உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக ஆர். மகாதேவன் மற்றும் என். கோட்டீஸ்வர் ஆகியோரை கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்ற  நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

இதில் நீதிபதி ஆர். மகாதேவன் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக பணியாற்றியவர். இதேபோன்று நீதிபதி என். கோட்டீஸ்வர் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். மேலும் இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.