தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அலெக்ஸ்-ரூபின்ஷா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ரூபின் ஷா 24-வது வார்டு விசிக கட்சி கவுன்சிலர் ஆவார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கும்பகோணம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது பால்சாமி (23), அருண்குமார் (21), அர்னால்டு ஆண்டனி (23), கெயில் ஆண்டனி (22) என்பது தெரிய வந்தது. அதோடு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவரை தாக்கிய வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் ஆவார். மேலும் இவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அலெக்சையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.