இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன்கள் இருப்பதால் அதிலேயே ஒரு சிலர் மூழ்கி கிடக்கிறார்கள். ஒரு சிலரோ ரீல்ஸ்  எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் கூட  ரீல்ஸ் எடுத்து ஒரு சிலர் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்  ராய்காட் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா  பிரபலம் அன்வி காம்தர்(27)  என்பவர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆறு மணி நேரம் போராடி பலத்த காயங்களோடு பள்ளத்திலிருந்து மீட்டுள்ளனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது . பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில்  2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர்.