
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் இன்று 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.