சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரமானது திடீரென்று கழன்றதால் பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றுள்ளது . ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு இடையே அரசு பேருந்து ஒன்று திடீரென்று பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

பிறகு ஓட்டுநர் மற்றும் நடத்தினரும் பழுதடைந்த பேருந்தை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது பேருந்து முன் சக்கரம் கழன்று தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது . பேருந்தில் பயணிகள் இல்லாததாலும் சாமர்த்தியமாக ஓட்டுனர் பேருந்து இயக்கியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.