ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பத்தை எடுத்த கூடுப்பள்ளி மண்டலம் பிசாநத்தம் அருகிலுள்ள ஒண்டி பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடிபோதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தபோது அங்கு மரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் கன்று குட்டியை பல இடங்களில் கடித்துக் குதறி ரத்தத்தை உறிஞ்சியுள்ளார். அதில் கன்று குட்டி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி போட்டு அடித்து உதைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.