சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு  ஜெகன் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கீழச்சிவல்பட்டிலிருந்து இளையாத்தங்குடி செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுள்ளார். அப்போது  அதே சாலையில் எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜெகனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி ஜெகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஜெகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.