
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி 16 முதல் 59 வயது வரை உள்ள எந்த ஒரு அமைப்புசாரா துறை ஊழியர்களும் இ-ஷ்ரம் கார்டு மூலம் 60 வயது நிறைவடைந்த உடன் ஓய்வூதியமாக மாதம் 3000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த E-Shram கார்டுக்கு விண்ணப்பிக்க, eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்கப்படும். இ-சேவை மையத்திலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.