
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு ஜனார்த்தனை தனது வீட்டிற்கு அழைத்தார்.
அப்போது ஜனார்த்தன் வாஷிங்மெஷினை சரி செய்வதற்காக திறந்து பார்த்தார். அப்போது உள்ளே ஏதோ இருப்பது போல தெரிந்தது. எனவே அவர் தூசியாக இருக்கலாம் என நினைத்து அதை எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் உள்ளே ஒரு பாம்பு இருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்த பாபு மற்றும் ஜனார்த்தனன் உடனடியாக வனத்துறையினருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மெதுவாக பிடித்து கொண்டு சென்றனர். இது நாக பாம்பாக இருக்கலாம் என்றும் இது குழாய் வழியாக வாஷிங் மெஷினுக்குள் சென்றிருக்கலாம் எனவும் வனத்துறையினர் கூறினார்கள். மேலும் வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.