
சென்னை உயர்நீதிமன்றம் கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தற்போது ஒரு முக்கிய தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வராயன் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை சார்ந்த அமைச்சர்களுடன் சேர்ந்து கல்வராயன் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன் பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.