
இந்திய மக்களின் வாழ்வியலில் தங்கம் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தங்க நகைகள் அணிந்து கொள்வதை இந்திய மக்கள் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள். தற்போது ஆண்களும் தங்க நகைகளை அணிகிறார்கள். வளர்ந்துவிட்ட ஆன்லைன் யுகத்தில் டிஜிட்டல் முறை மூலம் தங்கத்தை சேமிக்கும் வழிகளும் வந்துவிட்டது. இந்த நிலையில் நகை வியாபாரிகள் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என்று கூறி விளம்பரப்படுத்தி நகைகளை விற்று வருகிறார்கள்.
இது தொடர்பான மோசடி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நபர் ஒருவர், மக்களே செய்கூலி இல்லாமல் நகை வாங்குகிறீர்கள், அது எப்படிப்பட்ட மோசடி என்பதை பாருங்கள் என்று கூறுகின்றார். அதாவது மோதிரத்தின் மேற்பகுதியில் கல்போன்ற மாவு ஒன்றை வைத்து அதன் மேல் தங்கத்தை பற்ற வைத்த எடை அதிகமாகி விற்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். எனவே கடைகளிலும் சரி வெளியிலும் சரி செய்கூலி சேதாரம் இல்லாமல் நகை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.